லெபனானுக்கு இரண்டு கள மருத்துவமனைகளை அனுப்பி வைத்தது கத்தார்..!

Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, கத்தார் அமிரி விமானப்படையின் இரண்டு விமானங்கள் நேற்று முன்தினம் (11-11-2020) லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தரையிறங்கின.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லெபனான் அதிகாரிகளுக்கு உதவ, கத்தாரிலிருந்து இரண்டு கள மருத்துவமனைகளை ஏற்றிக்கொண்டு,
அமிரி விமானப்படையின் இரண்டு விமானங்கள் லெபனானுக்கு வந்தடைந்தது.

கத்தார் ஹமாத் துறைமுகத்தில் 7,493 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.!

ஒவ்வொரு கள மருத்துவமனையும் சுமார் 500 படுக்கைகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு கள மருத்துவமனைகளும் Tyre மற்றும் Tripoli பகுதியில் சேவை செய்ய பொறுத்தப்பட உள்ளது.

மேலும், கத்தார் நாட்டின் இந்த உதவிகளுக்கு லெபனான் சுகாதார அமைச்சர் டாக்டர். ஹமாத் ஹசன் அவர்கள் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கும்,  கத்தார் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

கத்தாரில் தொழிலாளர்களுக்கு ஆட்சேர்ப்பு ஒப்புதல் வழங்கும் பணி தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…