கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று (12-11-2020) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், 12-11-2020 வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு மாத காலத்திற்குள் புதிய அல்லது அதே முதலாளியுடன் (Sponsor) புதிய வேலை வாய்ப்புகளுக்காக பின்வரும் நிலை விசாக்களின் வகைகளை மாற்ற அல்லது நீட்டிக்க சம்பந்தப்பட்ட கத்தார் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
கத்தாரில் முகக்கவசம் அணியாத 164 பேர் மீது நடவடிக்கை.!
விசா பிரிவுகள்:
- வணிக விசா / பணி விசா.
- குடும்ப வருகை விசா
- ரத்து செய்யப்பட்ட குடியிருப்பு அனுமதி / ரத்து செய்யப்பட்ட QID-க்கள்.
மேற்கண்ட விசா பிரிவுகளின் கீழ் உள்ள இலங்கை வெளிநாட்டவர்களுக்கு கத்தாரில் புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சிறப்பு ஏற்பாடு வழங்கும் என கூறியுள்ளது.
மேலும், விசாவை மாற்ற அல்லது நீட்டிக்க கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் தொடர்புடைய துறைகளைத் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளது.
கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…