கத்தாரில் உள்ள இந்த இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.!

temporarily close petrol station
Pic: Qatar Living

கத்தார் எரிபொருள் நிறுவனமான WOQOD Wadi Al Banat பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் முழு சேவைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது.

இதுகுறித்து WOQOD அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், Wadi Al Banat பெட்ரோல் நிலையம் ஜனவரி 20 முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்றும், புதுப்பித்தல் பணிக்காக இது மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தோஹா, துபாய் இடையே நேரடி விமான சேவைகள் தொடக்கம்.!

Wadi Al Banat பெட்ரோல் நிலையத்தில் அருகிலுள்ள Al Egla, Leqtaifiya, Rawdat Al-Hamama-3 மற்றும் Pearl ஆகிய பெட்ரோல் நிலையங்களில் சேவைகள் கிடைக்கும் என்றும் WOQOD குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதேபோல் Bu Fesseela பெட்ரோல் நிலையத்தில் புதுப்பித்தல் பணிக்காக மறு அறிவிப்பு வரும்வரை எரிபொருள் சேவைகள் கிடைக்காது என்றும், Sidra மற்றும் Auto பராமரிப்பு சேவைகள் திறந்திருக்கும் என்றும் WOQOD ட்விட்டரில் கூறியுள்ளது.

Bu Fesseela பெட்ரோல் நிலைய பயனர்கள் அதன் அருகிலுள்ள Al Kharaitiyat, Umm Salal மற்றும் Rawdat Al Hammamma பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகன தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்ள தற்காலிக நிலையம் அமைப்பு.!