COVID-19; கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் 109 நபர்கள் குணம்.!

Image Credits: ilq.net

கத்தாரில், கொரோனா வைரஸிலிருந்து மேலும் 109 நபர்கள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ‌இன்று (29-04-2020) அறிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 1,243ஆக உள்ளது.

கொரோனா அப்டேட் (ஏப்ரல் 29): கத்தாரில் புதிதாக 643 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 2,808 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 91,415 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அவசியமான சந்தர்ப்பங்களில் தவிர வெளியே செல்ல வேண்டாம் என்றும் மேலும், தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், பணியிடங்கள் மற்றும் பொது இடங்கள் உட்பட உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கவும், முகக்கவசங்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் வைரஸ் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க சமூக வருகைகளைத் தவிர்க்கும் மாறும் அமைச்சகம் மக்களை நினைவூட்டியுள்ளது