கத்தாரில் ஈத் விடுமுறை நாட்களில் தினமும் 124 டன் கழிவுகள் அகற்றம்; MME ட்வீட்.!

Pic: MME

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) பொது தூய்மைத் துறை, அல் ஷமால் (Al Shamal) நகராட்சியின் ஒத்துழைப்புடன், ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் நாட்டின் வடக்கு கடற்கரைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 124 டன் கழிவுகளை அகற்றியுள்ளது.

ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில், கடற்கரைகளில் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது தூய்மைத் துறை அனைத்து கடற்கரைகளிலும் குப்பை தொட்டிகளின் எண்ணிக்கையை கூடுதலாக வைத்திருந்ததாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: லெபனான் வெடிப்புச் சம்பவம்; கத்தார் அமீர் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.!

மேலும், தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன என்றும், தயவுசெய்து குப்பைகளை கீழே போடாமல், குப்பை தொட்டிகளில் போடுமாறும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar