கத்தாரில் இன்று முதல் 14 புதிய வழித்தடங்களை Karwa பேருந்து சேர்த்துள்ளது.!

14 Karwa bus routes to be added starting 20 September
Pic: iloveqatar.net

கத்தார் அரசுக்கு சொந்தமான பொதுப் போக்குவரத்து நிறுவனம் Mowasalat (Karwa) இன்று (20-09-2020) முதல் புதிதாக 14 வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான நேரங்கள் மற்றும் அட்டவணைகள் Karwa Bus பயன்பாட்டில் கிடைக்கும் என Mowasalat (Karwa) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் போக்குவரத்து வெள்ளிக்கிழமைகளில் பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளது.!

முன்னதாக, Mowasalat அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், எங்கள் பயணிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக, 101 (Al Ruwais), 102 மற்றும் 102X (Al Khor) ஆகிய வழித்தடங்களில் செப்டம்பர் 18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும், மீதமுள்ள வாரங்களில் இந்த வழிகள் கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.

கத்தாரில் பேருந்துகள், தோஹா மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் COVID-19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 1 முதல் 30% திறனுடன் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் ஏர்வேஸ் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…