குவைத் அமீர் மறைவு: கத்தாரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இறுதி பிரார்த்தனை.!

Absentee funeral prayer for late Sheikh Sabah Al-Ahmad in all Qatar mosques
Photo: Gulf-Times

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (29-09-2020) காலமானார்.

குவைத் அமீர் உயிரிழந்ததை தொடர்ந்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக குவைத் நாட்டிற்கு நேற்று (30-09-2020) சென்று வந்தார்.

இதையும் படிங்க: மறைந்த குவைத் அமீரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் கத்தார் அமீர்.!

மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களுக்காக நேற்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கத்தாரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இறுதி பிரார்த்தனை நடைபெறும் என அமிரி திவானில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கத்தாரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் நேற்று இஷா தொழுகைக்குப் பின், மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களுக்காக தொழுகை நடத்தப்பட்டது.

Absentee funeral prayer for the late Kuwait Amir Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah held at Qatar mosques after Ishaa prayer Wednesday. PICTURES: Naushad Thekkayil, Shaji Kayamkulam & Shemeer Rasheed

Posted by Gulf-Times on Wednesday, 30 September 2020

இதையும் படிங்க: கத்தாரின் வடக்கு பகுதிகளில் நேற்று பலத்த மழையுடன் ஆலங்கட்டிகள் விழுந்தன.! (காணொளி)

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…