வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தம்: குவைத் அமீர் மகிழ்ச்சி.!

Agreement resolve Gulf Crisis
Pic: AFP

குவைத் அமீர் HH ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இறுதி உடன்பாட்டை தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சாதனைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் pan-Gulf மற்றும் pan-Arab ஒற்றுமையாக மற்றும் நிலையாக தக்கவைத்துக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கத்தாரில் சுமார் 1 மில்லியன் மரங்கள் நடும் பிரச்சாரம்.!

இந்த ஒப்பந்தம் தங்கள் மக்களின் நம்பிக்கையான பாதுகாப்பு, நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நலன்புரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்கான அனைத்து கட்சிகளின் ஆர்வத்தையும் நிரூபிக்கிறது என குவைத் அமீர் கூறியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் மேற்கொண்ட பெருமுயற்சிகள் எப்போதும் எங்கள் மனதிலும் வரலாற்று பக்கங்களிலும் உயிருடன் இருக்கும் என்று குவைத் அமீர் கூறியுள்ளார்.

குவைத் அமீர் அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார், மேலும் அதிபரின் ஆதரவு வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் அமீர் கூறியுள்ளார்.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் நேற்று 100 பேருக்கு மேல் நடவடிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…