இந்தியாவில் இருந்து ஆகஸ்ட் 20 முதல் கத்தார் செல்லும் விமானங்களின் பட்டியல்.!

Air India express announce flights Doha to india
Image Credit: travellight/Shutterstock.com

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அரசானது குறிப்பிட்ட சில நாடுகளுடன் “Air Bubble” என்ற ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கி வருகின்றது.

சமீபத்தில், இந்தியா மற்றும் கத்தார் இடையே போடப்பட்ட இந்த ஒப்பந்தப்படி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான நாட்களில் சிறப்பு விமான சேவைகளை இரு நாடுகளுக்கும் சொந்தமான விமான நிறுவனங்கள் விமானங்கள் மூலம்  இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை தொடக்கம்.!

இதனை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு செல்ல வேண்டிய விமானங்களுக்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கத்தாருக்கு ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலும் மொத்தம் 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில், தமிழகத்தில் இருந்து மூன்று விமானம் கத்தாருக்கு செல்லவிருக்கின்றன.

இந்த மூன்று விமானங்களில், இரண்டு விமானம் வரும் ஆகஸ்ட் 22, 30 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்தும், ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானமும்‌ கத்தாருக்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fly from India to Doha!Bookings are open!For details of the travel requirements, please visit:…

Posted by Air India Express on Monday, August 17, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/