கத்தார் ஏர்வேஸ் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமான சேவைகளை தொடக்கம்.!

Qatar Airways to operate flights to and from 13 Indian cities
Pic: Twitter/Qatar airways

கத்தார், இந்தியா இடையே சிறப்பு விமானங்களை இயக்க போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்தியாவின் 13 நகரங்களுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

எங்கள் விமானங்களில் பயணிக்க குறிப்பிடப்பட்ட வகைகளில் ஒன்றிற்கு தகுதிபெறும் பயணிகளுக்கு மட்டுமே நாங்கள் இடமளிக்க முடியும் என கத்தார் ஏர்வேஸ் அதன் இனைய‌தளத்தில் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார், இந்தியா இடையே ஆகஸ்ட் 18 முதல் சிறப்பு விமான சேவைகளை தொடங்க ஒப்புதல்.!

இந்தியாவிலிருந்து கத்தாருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்:

  • கத்தார் குடிமக்கள்
  • கத்தார் நாட்டின் செல்லுபடியாகும் விசா  வைத்திருக்கும் இந்தியர்கள்.
  • இந்திய பயணிகள் கத்தாருக்கு பயணிக்க வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர், தாங்கள் வைத்திருக்கும் குறிப்பிட்ட விசா பிரிவில் கத்தாருக்குள் நுழைய இந்திய நாட்டினருக்கு பயணத் தடை இல்லை என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களில் உறுதி செய்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுபவர்கள்:

  • கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.
  • கத்தார் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் OCI (Overseas Citizens of India) அட்டைதாரர்கள்.
  • இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழிகாட்டுதலின் கீழ் எந்தவொரு வகையிலும் இந்திய அரசு வழங்கிய செல்லுபடியாகும் விசாவைவை கத்தார் நாட்டு குடிமக்கள்.

இந்தியாவின் நகரங்களான சென்னை, அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகளை வழங்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியல் வெளியீடு.!

மேலும், அந்தந்த அரசாங்கத்தின் நுழைவு விதிமுறைகள் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்றும், COVID-19 RT-PCR மருத்துவ பரிசோதனை பற்றிய தகவல்களுக்கு அனைவரும் தங்கள் வலைத்தளத்தை சரிபார்க்குமாறும் விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/