அல் கோர் பூங்கா நுழைவு டிக்கெட் இனி அல் மீரா கிளைகளில் கிடைக்கும்.!

Al khor Family Park
Pic: MME

கத்தாரில் உள்ள அல் கோர் (Al Khor) பூங்காவிற்கு வருகை தர வசதியாக, நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) அல் மீரா கிளைகளில் பூங்காவிற்கான நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

Airport, Hyatt Plaza, Gulf Mall, Al Thakhira, Al Khor, Al Wakrah, Al Shamal, Al Mansoura ஆகிய இடங்களில் உள்ள அல் மீரா கிளைகளில் பூங்காவிற்கான டிக்கெட் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

கத்தார் அல் கோர் குடும்ப பூங்கா திறப்பு நேரம் மாற்றியமைப்பு.!

அல் கோர் பூங்காவிற்கான நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு QR 15 மற்றும் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு QR 10 ஆகும்.

அல் கோர் குடும்ப பூங்காவிற்கு வருவதற்கான புதிய நேரத்தை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி, வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும், இருப்பினும் டிக்கெட் வழங்குமிடம் இரவு 8 மணிக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கோர் பூங்கா ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கும், செவ்வாய்க்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இன்று (டிச.26) புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…