குவைத் அமீரின் மறைவுக்கு கத்தாரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – கத்தார் அமீர் அறிவிப்பு.!

Amir declares three-day mourning in Qatar for Kuwait Amir
Pic: The Peninsula Qatar

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (29-09-2020) உயிரிழந்தார்.

குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களுக்கு தற்போது வயது 91. குவைத் அமீர் உயிரிழந்ததை தொடர்ந்து கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தார், இந்தியா இடையே அக்டோபர் மாதம் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!

கத்தார் அமிரி திவான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த குவைத் அமீர் HH ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் ஒரு சிறந்த தலைவர் என கத்தார் அமீர் கூறினார்.

குவைத் அமீரின் மறைவுக்கு கத்தார் நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் கத்தார் அமீர் அறிவித்தார்.

மேலும், குவைத் அமீரின் மறைவுக்கு மற்ற வளைகுடா நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தாரில் கடந்த மூன்று மாதங்களில் 4,300 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…