சவுதி பட்டத்து இளவரசருடன் கத்தார் அமீர் சந்திப்பு.!

Amir meet saudi crown prince
Pic: QNA

சவுதி அரேபியாவின் அல் உலா (Al Ula) நகரில் நேற்று (05-01-2021) 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கத்தார் உடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகள் ஒப்புதல்; விரைவில் விமானங்களும் அனுமதி.!

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், துணை பிரதமரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான HRH முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் அவர்களை நேற்று அல் உலா Governorate-ல் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் வளைகுடா நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு அவர்கள் செய்தனர்.

வளைகுடா நாடுகளின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட GCC தலைவர்கள்.!

மேலும், இந்த சந்திப்பில், கத்தார் அமீருடன் அதிகாரபூர்வ தூதுக்குழுவின் பல சிறப்பு உறுப்பினர்கள் மற்றும் சவுதி அரசு தரப்பிலிருந்து, இளவரசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…