FIFA அமைப்பின் தலைவருடன் கத்தார் அமீர் சந்திப்பு.!

Amir meets FIFA President
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (23-11-2020) அமிரி திவான் அலுவலகத்தில் FIFA அமைப்பின் தலைவர் HE கியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​கத்தார் நாட்டிற்கும், FIFA-க்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர்.

FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!

கத்தார் நாட்டில் சரியாக இரண்டு வருடங்களில் தொடங்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்துவது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

மேலும், விளையாட்டு தொடர்பான பல பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்த சந்திப்பில், அமீரின் தனிப்பட்ட பிரதிநிதியான HH ஷேக் ஜாசிம் பின் ஹமாத் அல் தானி அவர்களும் கலந்து கொண்டார்.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் இன்று ஒரே நாளில் 194 பேர் மீது நடவடிக்கை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…