கத்தார் 2022 உலகக் கோப்பை: FIFA தலைவருடன் அமீர் சந்திப்பு..!

Amir meets FIFA President
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (07-10-2020) அமிரி திவான் அலுவலகத்தில் FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ அவர்களைச் சந்தித்தார்.

FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ நேற்று கத்தார் நாட்டிற்கு வருகை தந்த போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டினர்கள் அதிகமான இடங்களில் சொத்துக்களை வைத்திருக்கலாம் – கத்தார் அரசு அனுமதி.!

இந்த சந்திப்பில், கத்தார் மற்றும் சர்வதேச கூட்டமைப்புக்கும் இடையேயான ஒத்தழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் இது தொடர்பாக செய்யப்பட்ட சாதனைகள் என பல விளையாட்டு சம்மந்தபட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில், அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி HH ஷேக் ஜாசிம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 3 பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…