கத்தார் அமீர் சூடான் நாட்டின் TSC-யின் முதல் துணைத் தலைவருடன் சந்திப்பு.!

Amir meets First VicePresident
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (31-01-2021) காலை தனது அமிரி திவான் அலுவலகத்தில் சூடான் நாட்டின் இடைக்கால இறையாண்மை கவுன்சிலின் (TSC) முதல் துணைத் தலைவரான HE Lt. Gen. Mohamed Hamdan Daglo மற்றும் அவருடன் வந்த தூதுக்குழுவினருடன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் தொடக்கத்தில், சூடானின் இடைக்கால இறையாண்மை கவுன்சிலின் முதல் துணைத் தலைவரான HE Lt. Gen. Mohamed Hamdan Daglo சூடானின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கத்தார் அமீருக்கு விளக்கமளித்தார்.

கத்தாரில் மசூதிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.!

மேலும், அனைத்து துறைகளிலும் சூடானுக்கு கத்தார் அளித்த ஆதரவுக்கு கத்தார் அமீருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, ​​இரு நாடுகளுக்கிடையிலான சகோதர உறவுகள் மற்றும் சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களுக்கு கூடுதலாக அவற்றை ஆதரிப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உண்டான வழிமுறைகள் குறித்து அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியம் வழங்க கத்தார் அமீர் உத்தரவு.!