கத்தார் அமீர் லிபியா வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் சந்திப்பு.!

Amir meets Libyan ministers
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (26-10-2020) லிபியா வெளியுறவு அமைச்சர் Mohamed Al-Taher Siala மற்றும் லிபியா உள்துறை அமைச்சர் Fathi Ali Bashagha ஆகியோரை அமிரி திவான் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில், லிபியாவின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதோடு கூடுதலாக, இருதரப்பு ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு உண்டான வழிமுறைகளை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

இதையும் படிங்க: கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்வை ஒத்திவைத்தது.!

இதேபோல், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்களும் லிபியா வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களை சந்தித்தார்.

இதன்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு துறையில், இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இதையும் படிங்க: கத்தாரில் இலவச பருவகால காய்ச்சல் தடுப்பூசி கிடைக்கும் சுகாதார மையங்களின் பட்டியல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…