கத்தார் அல்-கானிம் பகுதியிலுள்ள கட்டிடத்தில் தீ விபத்து..!

Civil Defence contains huge fire at building in Old Al-Ghanim area
Image Credits: Twitter/Marsalqatar

கத்தார் அல்-கானிம் (Al-Ghanim) பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று (13-08-2020) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து, கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-கானிம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, கத்தார் சிவில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.!

இருப்பினும், Souq Waqif அருகில் Al Ghanim பகுதியில் பெரிய அளவிலான கருப்புநிற புகை மண்டலமாக இருப்பதை சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar