கத்தாரில் புகையிலை பொருட்களை கடத்த முயற்சி; சுங்க அதிகாரிகள் முறியடிப்பு.!

Customs seizes huge amount of tambaku at Hamad port
Pic: The Peninsula Qatar

கத்தார் நாட்டில் உள்ள ஹமாத் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை (tobacco) சர்க்கரை மூட்டைக்குள் மறைத்து கடத்த முயன்றபோது பொது சுங்க ஆணைய (GAC) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பொது சுங்க ஆணையம் ட்வீட்டர் பதிவு ஒன்றில், சர்க்கரை மூட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,435 பைகளில் 2,152 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அமீர் ஹிஜிரி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.!

மேலும், ஹமாத் துறைமுகத்தில் உள்ள GAC பிரிவு சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறது என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/