பெய்ரூட் வெடிவிபத்தில் ஏற்பட்ட சேதங்களை கத்தார் துணை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!

Deputy Prime Minister tours site of Beirut port explosion
Pic: Twitter/@MBA_ALThani

கத்தார் துனை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அவர்கள் லெபனான் நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

Pic: Twitter/@MBA_ALThani

பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தையடுத்து, கத்தாரின் நிலையான ஆதரவு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு லெபனான் அதிபர் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கும், பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தை பார்வையிட வந்த கத்தார் துணை பிரதமருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து: கத்தார் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது..!

மேலும், லெபனான் மக்களுக்கு புனரமைப்பு மற்றும் பேரழிவை சமாளிப்பதில் கத்தாரின் நிலையான ஆதரவை கத்தார் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது.

கத்தார் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு மருத்துவ உதவிகள், நன்கொடைகள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: COVID-19; கத்தாரில் இதுவரை 6,00,000க்கும் மேற்பட்டோர் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram