பெய்ரூட் வெடி விபத்து: கத்தார் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது..!

Two cargo aircraft carrying medical aid from Qatar arrive in Beirut
Two cargo aircraft carrying medical aid from Qatar arrive in Beirut. Pic: Twitter/@alraya_n

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாகவும், லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும், கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) அவசர மருத்துவ உதவிகளை லெபனானுக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: லெபனானுக்கு கத்தார் அனுப்பிய இரண்டாவது கள மருத்துவமனை திறப்பு.!

இந்த அவசர மருத்துவ உதவிகளுடன், QRCS-இன் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு நிவாரண குழுவும் இரண்டு அமிரி விமானப்படையின் விமானம் மூலம் பெய்ரூட்டில் உள்ள Rafic Hariri சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (16-08-2020) வந்தடைந்தது.

லெபனான் கத்தார் தூதர் HE முகமது ஹசன் அல் ஜாபர் மற்றும் லெபனானில் உள்ள QRCS அலுவலக இயக்குநர் டாக்டர் நிஹால் அல் ஹனாபி ஆகியோர் லெபனான் இராணுவத் தளபதி மற்றும் பெய்ரூட்டில் உள்ள கத்தார் தூதரகத்தின் தூதரகக் குழுவின் முன்னிலையில் இந்த மருத்துவ உதவியை பெற்றனர்.

இதையும் படிங்க: கத்தாரில் கோடைக்கால வேலை நேரங்களை மீறியதற்காக 67 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms/