கத்தாரில் மூடுபனி ஏற்படுவதற்கான வாய்ப்பு; QMD எச்சரிக்கை.!

foggy weather condition
Pic: The Peninsula

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இன்று (03-02-2021) இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை (பிப்ரவரி 5) வரை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மூடுபனி முதல் பனிமூட்டமான வானிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வானிலை காரணமாக, 2 கிலோமீட்டருக்கும் குறைவான தெரிவுநிலை மற்றும் சில நேரங்களில் பூஜ்ஜியத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை.!

புதன்கிழமை மாலை 6 மணி வரை வானிலை கரையோரங்களில் பனிமூட்டமாக இருக்கும் என்றும், பகலில் சில மேகங்களுடனும், இரவில் குளிராக இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தனது தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை ஏற்பட்டால் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கத்தார் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தாரில் இன்று பல்வேறு அமைச்சகங்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு.!