ஆப்கான் அதிபர் கத்தார் வருகை; அமீருடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினர்.!

H.H. The Amir and Afghan President Ghani hold official talks
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் முகமது அஷ்ரஃப் கனி ஆகியோர் நேற்று (06-10-2020) கத்தார் அமிரி திவான் அலுவலகத்தில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினர்.

முன்னதாக, கத்தார் நாட்டிற்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் அவருடன் வந்த தூதுக்குழுவையும் அமீர் வரவேற்றார். ஆப்கானிஸ்தான் அதிபரின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்த உதவும் என்று தனது நம்பிக்கையை அமீர் வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: குவைத் அமீரின் மறைவுக்கு கத்தார் பிரதமர் நேரில் சென்று இரங்கல்.!

பின்னர், கத்தார் அமீரின் அன்பான வரவேற்புக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கத்தார் அமீருக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், ​​இரு தரப்பினரும், இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை வளர்ப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உண்டான வழிமுறைகளை ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரஃப் கனி மற்றும் அவருடன் வந்த தூதுக்குழுவினருக்கு அமிரி திவானில் மதிய உணவு விருந்தை கத்தார் அமீர் வழங்கினார்.

கத்தார் வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; MoPH

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…