கத்தார் புதிய இந்திய தூதர் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.!

New Qatar Indian Ambassador
Pic: Twitter/India In Qatar

கத்தாரின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) கத்தார் வெளியுறவு அமைச்சர் HE சுல்தான் பின் சாத் அல் முரைக்கி (Sultan bin Saad Al Muraikhi) அவர்களை நேற்று (10-08-2020) சந்தித்தார்.

இந்த சந்திப்பில், கத்தார் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் அவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் HE சுல்தான் பின் சாத் அல் முரைக்கி அவர்கள் தகுதிச் சான்றிதழ் (credentials) நகலை வழங்கினார்.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.!

இதில், இருவரும் இந்தியா-கத்தார் இடையேயான உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இதற்குமுன், கத்தாரில் 2016ஆம் ஆண்டு முதல் இந்திய தூதரக பணியாற்றி வந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் தற்போது சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தாரில் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளராக இருந்தவர். மேலும், இவர் இந்திய வெளியுறவு சேவையின் 1998ம் தொகுப்பை சேர்ந்தவராவார்.

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து ஆகஸ்ட் 16 முதல் 30 வரை இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் அறிவிப்பு.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms/

? Telegram https://t.me/tamilmicsetqatar