கத்தார் ஹமாத் துறைமுகத்தில் 2122 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; சுங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!

Huge amount of ‘tambaku’ seized at Hamad Port
Pic: TPQ

கத்தார் நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தும் முயற்சியை கடல்சார் சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டரில், ஹமாத் துறைமுகத்தில் (Hamad Port) கோதுமை பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற பெரிய அளவிலான புகையிலை பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கத்தாரில் நாளை முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு; QMD ட்வீட்.!

மேலும், அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த புகையிலை பொருட்களின் மொத்த எடை சுமார் 2122 கிலோ என சுங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் பட்டியல் வெளியீடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…