VBM 4ம் கட்டம்: கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் ‌17 கூடுதல் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 17 கூடுதல் விமானங்களின் பட்டியலை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இன்று (09-07-2020) வெளியிட்டுள்ளது.

கத்தார் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள கூடுதல் விமானங்களின் அட்டவணைப்படி, சென்னைக்கு 3 விமானம், மும்பைக்கு 4 விமானம், லக்னோவுக்கு 3 விமானம், ஹைதராபாத்திற்கு 3 விமானம், பெங்களூருக்கு 3 விமானம் மற்றும் கொச்சினுக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து நான்காம் கட்டமாக இந்தியாவுக்கு 51 விமானங்கள்; இந்திய தூதரகம் பட்டியல் வெளியீடு.!

இந்தியாவுக்கு செல்லும் இந்த அனைத்து விமானங்களும் இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோவால் இயக்கபட உள்ளது.

கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் இந்த மூன்று கூடுதல் விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.