கத்தாரில் FIFA உலகக்கோப்பை மைதானத்தை பார்வையிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர்.!

Indian FM Visit Stadium
Pic: Twitter/Dr. S.Jaishankar

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டு நாள் பயணமாக கடந்த (27-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று கத்தார் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

கத்தாரில் 2022ம் ஆண்டு FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஒன்றான அல் ரயானில் உள்ள அகமது பின் அலி மைதானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.

கத்தார் துணை பிரதமர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.!

இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்டரில், இந்த சிறப்பான மைதானத்தை கட்டமைத்த Larsen & Toubr மற்றும் அவர்களின் கட்டாரிய கூட்டாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

மேலும், தரம் மற்றும் விநியோகத்திற்கான இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கத்தாரில் வலுக்கும் எதிர்ப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…