கட்டாரா கடற்கரைகளின் வேலை நேரம் மற்றும் கட்டண விபரம் அறிவிப்பு..!

Katara Beach working hours
Pic: Katara

கட்டாரா (Katara) கலாச்சார கிராமம் நேற்று (21-08-2020) அதன் கடற்கரை எண் 3, 4, 5 ஆகியவை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என‌ அறிவித்துள்ளது. இந்த கடற்கரைகளில் சூரிய அஸ்தமனம் வரை நீச்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டண விபரங்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு QR 50 கட்டணமும், 7 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு QR 25 கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு நுழைவு இலவசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகள் இடைநிறுத்தம்; தொழிலாளர் அமைச்சகம் முடிவு.!

மேலும், QR 5 ரியாலுக்கு கடற்கரை நாற்காலி கிடைக்கிறது எனவும், கடற்கரை குடைகள் தற்போது கிடைக்கவில்லை. மேலும் தகவலுக்கு 55449862 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கட்டாரா குறிப்பிட்டுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/