Katara-வில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் நிறைவடைந்தது.!

Pic: Katara

கட்டாரா (Katara) கலாச்சார கிராமத்தில் ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் கடந்த நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், நேற்றுடன் (03-08-2020) நிறைவடைந்தது. கட்டாராவில் நடைபெற்ற இந்த ஈத் அல் அத்ஹா கொண்டாட்டம் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Pic: Katara

பெற்றோர்களுடன் கட்டாராவை பார்வையிடும் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு ஈத் அல் அத்ஹா பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது என கட்டாரா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் எதிர்வரும் நாட்களில் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.!

கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஈத் அல் அத்ஹாவை கொண்டாடுவதற்காக கட்டாரா பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கட்டாராவில் உள்ள மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் Salem Mabkhout Al Marri‌ தெரிவித்துள்ளார்.

Pic: Katara

மேலும், கட்டாரவிற்கு வருகைதரும் ஏராளமான குழந்தைகளுக்கு ஈத் அல் அத்ஹா பரிசு பொருட்கள் பாதுகாப்பான முறையில் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar