கத்தாரில் எதிர்வரும் நாட்களில் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Pic: Gulf-Times

கத்தார் வானிலை ஆய்வுத்துறை நாளை (04-08-2020) முதல் ஆகஸ்ட் 7 வரை வடமேற்கில் புதிய வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் 12 முதல் 22 கி.மீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பகல் நேரங்களில் சில இடங்களில் காற்று 30 கி.மீ வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் அதிகபட்ச வெப்பநிலை 37‌ டிகிரி செல்சியஸ் முதல் 48‌ டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் சட்டவிரோதமாக செயல்பட்ட உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை.! 

மேலும், வானிலை ஆய்வுத்துறை தனது தினசரி அறிக்கையில், இன்று‌ (03-04-2020) மாலை 6 மணி வரை வானிலையானது கரைக்கு அருகில் லேசான தூசி காற்று மற்றும் சில மேகங்களுடன் பகல் நேரத்தில் வெப்பமாக இருக்கும் என்றும், இரவில் ஈரப்பதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar