கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

Katara Traditional Dhow Festival
Pic: Katara

கத்தாரில் பாரம்பரியமான தோவ் (கப்பல்) விழாவின் 10ஆம் பதிப்பு குவைத், ஓமான், ஈராக் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 5 தேதி வரை நடைபெற உள்ளது.

கத்தார் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாரம்பரியமான தோவ் விழா நடைபெறும் என கத்தார் பொது மேலாளர் Dr. Khalid bin Ibrahim al-Sulaiti கூறியுள்ளார்.

இந்த விழாவில் போட்டிகள், கடல் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

கத்தாரில் நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

மேலும், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கப்பல் கட்டும் செயல்முறை மற்றும் பண்டைய கைவினைப் பொருட்களைக் காண்பிக்கும் பட்டறைகள் விழாவில் இடம் பெற்றுள்ளது.

தோவ் விழாவின் அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் Omani Folk Band கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா, கத்தாரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கும், தேசிய அடையாளத்தை பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்ளது என்று Dr. Al-Sulaiti தெரிவித்துள்ளார்.

கத்தார் விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய் கண்டுபிடிப்பு.!

இந்த விழாவானது, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மற்றும் டிசம்பர் 4ம் தேதி அன்று மாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…