கத்தார் தேடல் மற்றும் மீட்பு குழு லெபனான் நாட்டிற்கு புறப்பட்டது.!

Pic: Qatar Day

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (04-08-2020) பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

அமீரின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, லெபனானில் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்பு குழு‌ (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன்‌ நேற்று‌ (05-08-2020) லெபனானுக்கு புறப்பட்டது.

Images credit: H.E. Sheikh Joaan

இதையும் படிங்க: லெபனான் வெடி விபத்து; கத்தார் அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்தது.! 

முன்னதாக, பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவ பொருட்களை ஏற்றிக்கொண்டு, அமிரி விமானப்படையின் விமானங்கள் லெபனான் நாட்டில் உள்ள Rafic Hariri சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar