கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய மசாஜ் பார்லர் மூடல்..!

Massage parlour closed for violating COVID-19 guidelines
Pic: MOCI

கத்தாரில் கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மீறியதற்காக அமைச்சகம் மசாஜ் பார்லர் ஒன்றை மூடியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை மீறியதற்காக வர்த்தக மற்றும் தொழில்துறை (MOCI) அமைச்சகம் Aziziyah பகுதியில் அமைந்துள்ள மசாஜ் பார்லரை 15 நாட்களுக்கு மூடியுள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் பட்டியல் வெளியீடு.!

இதுகுறித்து அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தார் Aziziyah பகுதியில் அமைந்துள்ள மசாஜ் மேஜிக் (Massage Magic) மீது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமைச்சகம் முன்னர் வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…