கத்தாரில் கோடைக்கால வேலை நேரங்களை மீறியதற்காக 67 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடல்.!

Qatar Migrant workers
Photo: AFP

கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை கோடைக்காலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான வேலை நேரம் காலையில் ஜந்து மணி நேரத்திற்கு மேல் இருக்க கூடாது என்றும்,  காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த தீர்மானத்தின் விதிகளை நிறுவனங்கள் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்ய அமைச்சகத்தின் ஆய்வாளர்கள் நிறுவனங்களின் வேலைதளங்களுக்கு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான காலகட்டத்தில் களப்பயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கத்தார், இந்தியா இடையே ஆகஸ்ட் 18 முதல் சிறப்பு விமான சேவைகளை தொடங்க ஒப்புதல்.!

அமைச்சகத்தின் ஆய்வாளர்கள் களப்பயணம் மேற்கொண்டதன் விளைவாக 67 நிறுவனங்கள் இந்த முடிவின் விதிமுறைகளை மீறுவதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் வேலைத்தளங்களை 3 நாட்களுக்கு மூடியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் மந்திரி தீர்மானத்தின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இந்த காலகட்டத்தில் நேரடி சூரிய ஒளியின் கீழ் அல்லது திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அஷ்கல் புதிய Duhail Al Gharraf‌ பாலத்தை திறந்துள்ளது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/