கத்தார் அஷ்கல் புதிய Duhail Al Gharraf‌ பாலத்தை திறந்துள்ளது..!

Ashghal opens Duhail-Al Gharrafa bridge
Image Credits: Ashghal

கத்தாரில் 2020-2021 புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பொதுப் பணித்துறை ஆணையம் (Ashghal) Shamal சாலையின் Duhail Interchange Development திட்டத்தின் கீழ், Duhail Al Gharrafa பாலம் மற்றும் போக்குவரத்து சிக்னலின் சில பகுதிகளையும் திறந்துள்ளது.

புதிய பாலம் தொடக்க விழாவில்,
திட்ட விவகார இயக்குநர் Eng. யூசுப் அப்துல்ரஹ்மான் அல் எமாடி, நெடுஞ்சாலை திட்டங்கள் துறை உதவி மேலாளர் Badr Mohamed Darwish உள்ளிட்ட Ashghal மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கத்தாரில் வாகனங்களில் ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி; MOI ட்வீட்.!

இந்த புதிய பாலம் இப்பகுதியில், போக்குவரத்தை மேம்படுத்தும் என்றும், மேலும் Duhail மற்றும் Al Gharrafa உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடையே சிறந்த இணைப்பை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், COVID-19 தொற்றுநோய் காரணமாக சில தடைகள் இருந்தபோதிலும், இந்த திட்டமானது கால அட்டவணைக்கு முன்னதாக முடிக்கப்பட்டதில் Ashghal பெருமிதம் கொள்வதாக அல்-எமாடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம்கள்..!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/