கத்தாரில் NOC இல்லாமல் வேலைகளை மாற்றுவது எப்படி.? நடைமுறைகள் வெளியீடு.!!

Ministry lists procedure to change jobs in Qatar without NOC
Pic: iStock

கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA) NOC இல்லாமல் முதலாளிகளை மாற்றுவதற்கான பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், வேலையை மாற்ற NOC தேவையில்லை.!

பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:

1. தொழிலாளர் ADLSA-வின் மின்னணு அறிவிப்பு முறை மூலம் முதலாளிகளுக்கு தான் வேலையை மாற்றுவதாக அறிவிக்க வேண்டும்.

தொழிலாளர் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு குறைவாக பணியில் இருந்திருந்தால் ஒரு மாத அறிவிப்பு காலம் வழங்கப்பட வேண்டும், இரண்டு வருடங்களுக்கு மேல் பணியில் இருந்திருந்தால் இரண்டு மாத காலம் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

2. மின்னணு அறிவிப்பு முறை மூலம் வேலைகளை மாற்றும் நோக்கத்தை வெளிப்படுத்தும்போது, ​​பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

  • ADLSA-வின் முதலாளியை மாற்றும் விண்ணப்ப படிவம்.
  • முன்னாள் முதலாளியுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல். இது ADLSA-வால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒப்பந்த நகல் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு சலுகையை (Job Offer) இணைக்கலாம்.
  • அரபு மொழியில் புதிய முதலாளியின் வேலைவாய்ப்பு சலுகை (Job Offer).

3. தொழிலாளி மற்றும் புதிய முதலாளி வேலைவாய்ப்பு மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், ADLSA-வில் இருந்து ஒரு குறுந்தகவல் (SMS) பெறுவர்.

4. புதிய முதலாளி ADLSA-வின் டிஜிட்டல் அங்கீகார அமைப்பில் மின்னணு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

5. புதிய முதலாளி வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அச்சிட்டு தொழிலாளியுடன் கலந்துரையாடி கையெழுத்திட வேண்டும்.

6. புதிதாக கையெழுத்திடப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தத்திற்கு அங்கீகாரக் கட்டணமாக QR 60 ரியால் செலுத்தி, ADLSA-வின் டிஜிட்டல் அங்கீகார அமைப்பில் பதிவேற்ற வேண்டும்.

7. ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படும்போது, ​​புதிய முதலாளி புதிய QID-க்கான கோரிக்கையை உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட இந்த நடைமுறை முடிந்த பிறகு, தொழிலாளி புதிய வேலையைத் தொடங்க முடியும் என்றும், தொழிலாளி தனது புதிய கத்தார் அடையாள அட்டை (QID) மற்றும் சுகாதார அட்டையை புதிய முதலாளியிடமிருந்து பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகாண் காலத்தில் (Probation Period), தொழிலாளர் தனது வேலைகளை மாற்ற விரும்பினால், தற்போதைய முதலாளிக்கு குறைந்தது ஒரு மாதத்திற்குள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

புதிய முதலாளி, தற்போதைய முதலாளிக்கு ஆட்சேர்ப்பு கட்டணம் மற்றும் ஒரு வழி (One-Way) விமான டிக்கெட்டை தற்போதைய மற்றும் புதிய முதலாளிகள் ஒப்புக்கொண்ட விகிதத்தில் ஈடுசெய்ய வேண்டும், மேலும் அது ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் இரண்டு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: கத்தார் பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 350 பல்கலைக்கழகங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram

Telegram