கத்தார் பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 350 பல்கலைக்கழகங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது.!

postpones French Cultural Week
Pic: QU

டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2021-இன்படி, கத்தார் பல்கலைக்கழகம் (QU) 90 இடங்களை முன்னேறி சிறந்த 350 சர்வதேச பல்கலைக்கழகங்களின் குழுவில் நுழைந்துள்ளது.

இந்த முடிவுகளின்படி, கத்தார் பல்கலைக்கழகம் 301-350 குழு வரை உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

2021 உலக பல்கலைக்கழக தரவரிசை 93 நாடுகளிலுள்ள 1,527 பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியதாகும். இது இன்று வரை மிகப்பெரிய பல்கலைக்கழக தரவரிசையாக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் 30 சதவீத திறனுடன் கப்பல்களை இயக்க அனுமதி..!

கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்ட 13 வகையான அளவீடுகள் அளவிடப்பட்டு ஒரு பல்கலைக்கழகத்தின் செயல்திறன் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை கணிக்கப்படுகின்றது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை 2020ஆம் ஆண்டில், QS உலக பல்கலைக்கழக தரவரிசையில், 276-இல் இருந்து 2021 தரவரிசையில் 245ஆக நகர்ந்து, 31 இடங்கள் முன்னேறி, மிகவும் மேம்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இது தரவரிசையில், கத்தார் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய முடிவுகளுக்கு சான்றாக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் நான்கு பேர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

 Twitter

Instagram

 Telegram