கத்தாரில் சட்டவிரோதமாக செயல்பட்ட உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை.! 

Pic: Twitter/MME

கத்தார் அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியில் உள்ள நகராட்சி கட்டுப்பாட்டுத் துறை, மனித உணவு கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்துவது தொடர்பான 1990ஆம் ஆண்டின் சட்டம் 8ம் இலக்க சட்டத்தின்படி, உம் அல் சுபார் (Umm Al Zubar) பகுதியில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

Pic: MME

இந்த ஆய்வு பிரச்சாரத்தின் விளைவாக, உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த பல உணவு விற்பனை நிலையங்கள் கண்டறியப்பட்டதாக அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கூறியுள்ளது.

இதையும் படிங்க: VBM 5ம் கட்டம்: கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்.!

மேலும், உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar