கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

MoPH revises list of low risk countries from Sept 1‌
Pic: Shutterstock

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு பட்டியல் நேற்று (01-09-2020) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.

ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: கத்தாரில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம், வேலையை மாற்ற NOC தேவையில்லை.!

மேலும், குறைந்த ஆபத்துள்ள நாடுகளின்  பட்டியல் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை இந்த பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என அரசு தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் நேற்று குறைந்த ஆபத்துள்ள 41 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.

இதையும் படிங்க: இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிப்பு..!

குறைந்த ஆபத்துள்ள 41 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல்:

1. Brunei Darussalam
2. Thailand
3. China
4. New Zealand
5. Vietnam
6. Malaysia
7. South Korea
8. Cuba
9. Hungary
10. Finland
11. Latvia
12. Estonia
13. Norway
14. Italy
15. Lithuania
16. Greece
17. Slovakia
18. Ireland
19. Germany
20. Slovenia
21. Japan
22. Denmark
23. Cyprus
24. United Kingdom
25. Canada
26. Turkey
27. Poland
28. Austria
29. Algeria
30. Netherlands
31. Iceland
32. France
33. Croatia
34. Switzerland
35. Morocco
36. Australia
37. Belgium
38. Portugal
39. Czechia
40. Sweden
41. Uruguay

Image Credits: iloveqatar.net

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram