கடும் வெயிலில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்; MoPH ட்வீட்.!

MoPH shares benefits of staying hydrated during summer
photo used for representation only.

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் (குறிப்பாக கோடைக்காலத்தில்) குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளது.

தினசரி உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தபட்சம் 8 முதல் 12 டம்ளர் வரை இருக்க வேண்டும் என்று கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் தூதருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு..!

தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • தண்ணீர் அருந்துவதால் மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.
  • உடல் நச்சுகளை அகற்ற உதவுகிறது.
  • உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.
  • தண்ணீர் அருந்துவதால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
  • தண்ணீர் அருந்துவதால் தலைவலி குறையும்.
  • எடை இழப்பை ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
  • மலச்சிக்கலைத் தடுக்கிறது.
  • உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது.
  • முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook https://www.facebook.com/tamilmicsetqatar

?Twitter https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/