கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

Quarantine requirements for all arrivals in Qatar extended to December 31
Pic: The Peninsula Qatar

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு பட்டியல் நேற்று (01-10-2020) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: கத்தார் பெட்ரோலியம் அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

கத்தார் மற்றும் உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், பொது சுகாதார அமைச்சகத்தின் விருப்பப்படி பட்டியல் மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் நேற்று குறைந்த ஆபத்துள்ள 47 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.

இதையும் படிங்க: குவைத் அமீர் மறைவு: கத்தாரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் இறுதி பிரார்த்தனை.!

குறைந்த ஆபத்துள்ள 47 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல்:

Europe:

  • Hungary
  • Finland
  • Latvia
  • Estonia
  • Norway
  • Italy
  • Lithuania
  • Greece
  • Slovakia
  • Ireland
  • Germany
  • Slovenia
  • Denmark
  • Cyprus
  • United Kingdom
  • Poland
  • Austria
  • Netherlands
  • Iceland
  • France
  • Croatia
  • Switzerland
  • Belgium
  • Portugal
  • Bulgaria
  • Sweden
  • Malta
  • Romania
  • Russia

Asia:

  • Brunei Darussalam
  • Thailand
  • China
  • Vietnam
  • Malaysia
  • South Korea
  • Japan
  • Turkey
  • Singapore
  • Taiwan

Americas:

  • Cuba
  • Canada
  • Uruguay
  • Mexico

Africa:

  • Algeria
  • Morocco

Oceania:

  • New Zealand
  • Australia

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…