கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகளை வெளியிட்டது மத்திய வங்கி.!

New Qatari Riyal banknotes
Pic: The Peninsula

கத்தாரில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கத்தார் ரியாலின் ஐந்தாவது வெளியீட்டை ஒரு புதிய பதிப்புடன் புழக்கத்தில் விடுவதாக கத்தார் மத்திய வங்கி (QCB) அறிவித்திருந்தது.

இந்நிலையில், கத்தார் வங்கி தலைமையகத்தில் இன்று (13-12-2020) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கத்தார் ரியாலின் புதிய ஐந்தாவது பதிப்பை வெளியிட்டது. கத்தார் தேசிய தினத்தன்று இந்த புதிய ரியால் நோட்டுகள் புழக்கத்தில் வர உள்ளது.

பாலஸ்தீன அதிபருடன் கத்தார் அமீர் நாளை சந்திப்பு.!

புதிய ஐந்தாம் பதிப்பில் 62க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பல விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது என QCB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக 200 ரியால் மதிப்புள்ள நோட்டுகளும் வெளியிடப்பட்டது, இது 100 ரியால்களுக்கும், 500 ரியால் பணத்தாள்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முதல் கட்டத்தில், புதிய வெளியீட்டில் 8 பில்லியன் ரியால்கள் பம்பிங் செய்யப்படும் என்றும், வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பம்பிங் சேவை முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் 5-வது அறுவடை திருவிழா இந்த மாதம் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…