கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையம் மற்றும் FAHES சோதனை மையத்தை திறந்துள்ளது.! 

Pic: WOQOD

கத்தார் WOQOD அல் மஸ்ரூவா (Al Mazrouah) பகுதியில் புதிய WOQOD பெட்ரோல் நிலையம் மற்றும் FAHES வாகன சோதனை மையத்தை திறந்துள்ளது.

இந்த புதிய பெட்ரோல் நிலையம் திறப்பின் மூலம் Woqod அதன் பெட்ரோல் நிலையங்களின் வலையமைப்பை 105ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை கத்தாரின் ஒவ்வொரு பகுதிக்கும் சேவை செய்யக்கூடிய Woqod விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாகும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள FAHES வாகன சோதனை மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.!

இந்த பெட்ரோல் நிலையம் மற்றும் FAHES வாகன சோதனை மையம் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில், 24 மணிநேரம் செயல்படும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இதில், கனரக வாகனங்களுக்கு டீசல் தயாரிப்புகளை விற்பனை செய்வதோடு, டிரக்குகளுக்கு மேனுவல் கார் வாஷ், ஆயில் மாற்றுதல் மற்றும் டிரக்குகளுக்கான டயர் பழுதுபாார்த்தல் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar