குவைத் அமீரின் மறைவுக்கு கத்தார் பிரதமர் நேரில் சென்று இரங்கல்.!

Prime Minister offers condolences to Amir of Kuwait
Pic: QNA

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் (29-09-2020) காலமானார்.

குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மறைந்த குவைத் அமீர் சகோதரிகளுக்கு கத்தார் அமீரின் மனைவி இரங்கல்..!

கத்தார் அமீர், மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் இறுதி பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக குவைத் நாட்டிற்கு சென்றுவந்தார்.

இந்நிலையில், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல்தானி அவர்கள் நேற்று (05-10-2020) குவைத் நாட்டிற்கு சென்றார்.

பின்னர், குவைத் அமீர் ஷேக் சபா அவர்களின் மறைவுக்கு குவைத்தின் புதிய அமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களைச் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.

கத்தார் பிரதமருடன் குவைத் வந்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.

Prime Minister and Minister of Interior H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani arrives in Kuwait to offer condolences on the death of late HH Sheikh Sabah Al-Ahmad Al-Jaber Al-Sabah

Posted by The Peninsula Newspaper on Monday, 5 October 2020

 

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; MoPH

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…