கத்தாரில் கைதிகள் தயாரித்த பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.!

prisoners product available online
Pic: The Peninsula Qatar

கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) வழங்கிய e-store மூலம் நீங்கள் வாங்கும் ஆன்லைன் பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்பட்டது.

இந்த Electric Store என்பது உள்துறை அமைச்சக வலைத்தளத்தின் (Sub Portal) ஆகும், இது தண்டனை மற்றும் திருத்த நிறுவனங்களின் கைதிகளால் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துகிறது.

கத்தாரில் மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புகள் தொடரும்; QMD ட்வீட்.!

இது உயர்தர தயாரிப்புகள் என்றும், சிறப்புப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை மற்றும் திருத்த நிறுவனங்கள் துறை அல்லது அதன் விநியோக மையங்களில் நேரடியாக பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தயாரிப்புகளில், சிற்பங்கள், கலைப்படைப்புகள், ஆண் கைதிகள் தயாரித்த கைவினைப் பெட்டிகள் என்றும், துணி மற்றும் பைகள் பெண் கைதிகள் தயாரித்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.

கத்தார் தேசிய தின அணிவகுப்பில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…