கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியல் வெளியீடு.!

Qatar Airways adds ICMR approved Covid-19 test centres for India
Pic: Twitter/Qatar Airways

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தற்பொழுது விமான சேவைகளை வழங்கி வரும் நாடுகளை சேர்ந்த விமான நிலையங்கள் மற்றும் விரைவில் விமான சேவைகளை தொடங்கவிருக்கும் நாடுகளின் விமான நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து கத்தார் நாட்டிற்கு வரும் பயணிகள், பயணம் மேற்கொள்ள கத்தார் ஏர்வேஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான COVID-19 RT-PCR மருத்துவ சோதனை முடிவு மற்றும் கத்தார் ஏர்வேஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒப்புதல் படிவத்தையும் (consent form) வைத்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க COVID-19 எதிர்மறை சோதனை முடிவு கட்டாயம்.!

இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்த அனைத்து COVID-19 சோதனை மையங்களையும், இந்திய விமான நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.

மேலும், இந்த வலைத்தளத்தில் உள்ள ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு ஆய்வகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட RT-PCR சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar