கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க COVID-19 எதிர்மறை சோதனை முடிவு கட்டாயம்.!

Pic: Qatar airways

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் சில நாடுகளுக்கு விமான சேவைகளை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது குறிப்பிட்ட சில நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களிலிருந்து கத்தாருக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் (COVID-19) பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், தற்பொழுது விமான சேவைகளை வழங்கி வரும் நாடுகளை சேர்ந்த விமான நிலையங்கள் மற்றும் விரைவில் விமான சேவைகளை தொடங்கவிருக்கும் நாடுகளின் விமான நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், பயணம் மேற்கொள்ள எதிர்மறையான COVID-19 RT-PCR மருத்துவ சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.

மேலும், கத்தார் ஏர்வேஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒப்புதல் படிவத்தையும் (consent form) வைத்திருக்க வேண்டும் என்றும், இவற்றை வைத்திருக்காத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

இந்த புதிய விதிமுறையானது வருகின்ற ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. கத்தார் ஏர்வேஸில் பயணிப்பவர்கள், கத்தார் ஏர்வேஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட COVID-19 எதிர்மறை சோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கத்தார் ஏர்வேஸ் கூறியுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar