கத்தாரிலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

Pic: All india Radio News

வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானங்களின் புதுப்பிப்பு அட்டவணையை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம்‌ வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள புதுப்பிப்பு அட்டவணைப்படி, ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கேரளா விமான விபத்து; கத்தார் அமீர் மற்றும் துணை அமீர் இரங்கல்.!

கத்தாரில் இருந்து ஆகஸ்ட் 14ம் தேதி வரையிலும் மொத்தம் 11 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில், தமிழகத்திற்கு ஒரு விமானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவுக்கு செல்லும் இந்த விமானங்கள் இண்டிகோ விமானம் மூலம் இயக்கப்பட உள்ளது என்றும், விமானத்திற்கான டிக்கெட்டுகளை https://www.goindigo.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar