கத்தார், சவுதி இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்..!

Qatar Airways starts booking
Pic: Qatar airways

கத்தார் மற்றும் சவுதி அரேபியா இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகளை போக்குவரத்துக்கு திறக்க ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை (04-01-2021) இரவு முதல் எல்லைகள் திறக்கப்பட்டது.

சவுதி வான்வெளி வழியாக விமானங்களை இயக்க தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

இதனை அடுத்து, கத்தார் ஏர்வேஸ் வருகின்ற (11-01-2021) திங்கட்கிழமை முதல் சவுதி அரேபியாவுக்கான நேரடி விமானங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த விமானம் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2:05 மணிக்கு புறப்பட்டு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் (King Khaled) சர்வதேச விமான நிலையதிற்கு மாலை 3:30 மணிக்கு வந்தடையும் என தெரிவித்துள்ளது.

தோஹா E-Ring சாலை பாதைகளில் தற்காலிக மாற்றம்.!

மேலும், கத்தார் ஏர்வேஸ் விமானமான QR 1164 Boeing 787-8, ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் எந்த நிறுத்தமும் இல்லாமல் இயக்கப்படும் என பிரபல விமான நிபுணர் Alex Macheras ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…