இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விமான முன்பதிவை நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

Qatar Airways stops bookings
Pic: Twitter/Qatar Airways

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இந்தியா உட்பட 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் 20 நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமான முன்பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை.!

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் ட்வீட்டரில், சவுதி அரேபியாவில் பயணிகளுக்கான சமீபத்திய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான முன்பதிவுகளை ஏற்க முடியாது என்றும், தூதரக அதிகாரிகள், சவுதி குடிமக்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள நகரங்களான தமாம் மற்றும் ரியாத்தில் இருந்து தினசரி விமானங்களையும், ஜித்தாவிலிருந்து 4 வாராந்திர விமானங்களையும் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் இயக்குகிறது.

கத்தாரில் கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.!